டிசம்பர் 20இல் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் தேர்வு

ஹைதராபாத்| Webdunia| Last Modified வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (17:56 IST)
வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் பாடப் பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு Junior Research Fellowship வழங்குவதற்கான அகில இந்திய தகுதித் தேர்வு வரும் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வை National Academy of Agricultural Research Management நடத்துகிறது. இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்கள் naarm.ernet.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :