ஜூலை 30இல் B.E., B.Tech துணை கலந்தாய்வு

சென்னை| Webdunia| Last Modified செவ்வாய், 21 ஜூலை 2009 (11:11 IST)
ி.இ, பி.டெக் படி‌ப்புகளு‌‌க்கான துணை கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 30ஆம் தேதி காரை‌க்குடி அழக‌ப்ப செ‌ட்டியா‌ர் பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ல் நடைபெறு‌கிறது எ‌ன்று தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் நேரடியாக 2ஆம் ஆண்டில் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கான முதல் கட்ட கல‌ந்தா‌ய்வு காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெ‌ற்றது.

இந்நிலையில் சிவில், இயந்திரவியல், கெமிக்கல், மின்னியல் படிப்புகளில் காலி இட‌ம் ஏற்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியில் உள்ளவர்களுக்கு இந்த இடங்களில் ஒதுக்கீடு வழங்கப்படும்.
இதற்காக துணை கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 30ஆம் தேதி காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது எ‌ன்று தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :