ஜூலை 30இல் காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரி முதுநிலை பட்டபடிப்பு கலந்தாய்வு

காரைக்குடி| Webdunia|
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரு 30ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வர் சி.பிரபாவதி கூறுகையில், 2009-10ஆம் ஆண்டுக்கான எம்.ஏ., எம்.எஸ்சி. மற்றும் எம்.காம். முதுநிலை பட்டபடிப்பு பாடப் பிரிவுகளில் முதலாம் ஆண்டுக்கு சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஜூலை 30ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி உமையாள் கலையரங்கில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்தச் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு முதுநிலைப் பட்ட வகுப்புக்கான சேர்க்கை அனுமதி இல்லை என்றும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :