ஜூலை 1 முதல் M.Tech., M.E. விண்ணப்பம் வினியோகம்

சென்னை| Webdunia| Last Modified செவ்வாய், 30 ஜூன் 2009 (18:15 IST)
M.Tech., M.E. உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை, திருச்சி, திருநெல்வேலியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்கள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள M.Tech., M.E. M.Arch., உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான இடங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையம், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 13 மையங்களில் முதுநிலை பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூலை 1 முதல் 14ஆம் தேதி வரை வழங்கப்படும்.

மாணவர்கள் ரூ.500 செலுத்தி (எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250) விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 14ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :