சேவாலயா‌வி‌ன் இலவச க‌ணி‌னி‌, ஆ‌ங்‌கில‌ப் ப‌யி‌ற்‌சி

Webdunia|
சேவாலயா சேவை மைய‌ம் இ‌ந்த ஆ‌ண்டு‌ம் ‌கிராம‌‌ப்புற மாணவ‌ர்களு‌க்கு இலவச க‌ணி‌னி‌ ம‌ற்று‌ம் ஆ‌ங்‌கில‌ம் பேசு‌ம் ப‌யி‌ற்‌சி‌யினை நட‌த்தவு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து சேவாலயா அனு‌ப்‌‌பியு‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பு வருமாறு:

சேவாலயா சேவை மையமானது ஆண்டுதோறும் கிராமப்புற இளைஞர்கள் பயன்படும் வகையில் கோடைக்கால இலவச கணினிப் பயிற்சி மற்றும் ஆங்கிலம் பேசும் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

அதே போல் இந்த ஆண்டும் கோடைக்கால பயிற்சி வகுப்புகளானது, வரும் ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் ஏப்ரல் 20ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.
மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

சேவாலயா, கசுவா கிராமம்,
பாக்கம் அஞ்சல், திருநின்றவூர் - 602 024
போன்: 26344243, 64611488
செல்: 96770 37168, 93809 12459.


இதில் மேலும் படிக்கவும் :