செவிலியர் படிப்புக்கு 20ஆ‌ம் தே‌தி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை| Webdunia| Last Modified வியாழன், 9 ஜூலை 2009 (13:07 IST)
செவிலியர் படிப்புக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஜூலை 20 ஆ‌ம் தே‌தி வரை நீட்டித்து த‌‌மிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் செவிலியர் பட்டயப் படிப்புகள் அரசு சார்பில் நடத்தப்படுகிறது. நடப்பு (2009-10) கல்வி ஆண்டுக்கான செவிலியர் உதவியாளர் (6 மாதம்), மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்புகளுக்கு ஜூலை 1ஆ‌ம் தே‌தி முதல் 10ஆ‌ம் தே‌தி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செவிலியர் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் காலத்தை வரு‌ம் 20ஆ‌‌ம் தே‌தி வரை ‌நீ‌ட்டி‌த்து த‌‌மிழக அரசு உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :