செப்.29இல் சித்த மருத்துவப் படிப்புக்கு கலந்தாய்வு

சென்னை| Webdunia| Last Modified வெள்ளி, 25 செப்டம்பர் 2009 (15:41 IST)
சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்திய மருத்துவ முறை படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை முதறகட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கு இடையே இடமாறுதல் கோருவோருக்கான மறு ஒதுக்கீடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சில காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு காலியிடங்களுக்கு கலந்தாய்வு வரும் 29ஆம் தேதி நடத்தப்படுகிறது.
சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் இந்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

மறு கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், ஏற்கெனவே சேர்ந்துள்ள கல்லூரியிலிருந்து “ஃபோனபைட் சான்றிதழ்” வாங்கி வர வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் அம்பேத்கர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :