செப். 26ல் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தஞ்சாவூர்| Webdunia| Last Modified திங்கள், 14 செப்டம்பர் 2009 (15:54 IST)
தஞ்சாவூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையம் மற்றும் இந்நிறுவனங்களின் அமைச்சகம் சார்பில் வரும் 26ஆம் தேதி தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலைய துணை இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூர் என்.ஜி.ஓ. கட்டடம், புது ஆற்றுச்சாலை விருந்தினர் மாளிகை அருகில் நடத்தப்படும் இப்பயிற்சி, அக்டோபர் 5ஆம் தேதி வரை அளிக்கப்படுகிறது.
நவீன ‘டச் ஆசிட்’ முறையில் இப்பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது. பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு இந்திய அரசின் நகை மதிப்பீட்டாளர் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ. 3,500. எஸ்.சி., எஸ்.டி., பி.எச்., பிரிவினர்களுக்கு 50 சதக் கட்டணச் சலுகை உண்டு.

இப்பயிற்சி முடித்தவர்கள் நாட்டுடமை வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு பெற உதவும். சுயதொழிலாக நகை அடகு கடை மற்றும் நகை வியாபாரமும் செய்யலாம். இப்பயிற்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு 044-22500765, 044-22501011-12, 13 மற்றும் 99623-62993, 99446-49469 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :