சென்னை பல்கலை‌யி‌ல் விமான பணிப்பெண் படிப்பு

Webdunia| Last Modified புதன், 22 ஏப்ரல் 2009 (11:41 IST)
செ‌ன்னை‌ப் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல் வரு‌ம் க‌ல்‌வி ஆ‌ண்‌டி‌ல் ‌விமான‌ப் ப‌ணி‌ப்பெ‌ண் படி‌ப்பு உ‌ட்பட சில பு‌திய படி‌ப்புக‌ள் தொட‌ங்க‌ப்பட உ‌ள்ளன.

இது கு‌றி‌த்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் கூறுகை‌யி‌ல், பி.ஏ. ஆங்கிலம், தமிழ் போன்ற பழமையான படிப்புகளில் இருந்து முன்னோக்கி செல்லும் வகையில், தொழிற்சாலைகளுடன் இணைந்து வரும் கல்வி ஆண்டில், புதிய படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

அதன்படி, மெரினா ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன் இணைந்து விமான பணிப்பெண் மற்றும் விமான விருந்தோம்பல் படிப்பும், மேப்பில்ஸ் இஎஸ்எம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கம்ப்யூட்டர் தொழில் மையம், தொலைநிலை கம்ப்யூட்டர் உள்கட்டமைப்பு மேலாண்மை ஆகிய ஓராண்டு புதிய முதுநிலை பட்டயப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இவை உட்பட இயற்கை மருத்துவம், யோகா உள்ளிட்ட 8 விதமான பட்ட, பட்டயப் படிப்புகள் தொடங்கப்படுகின்றன.

விமான பணிப்பெண் படிப்புக்கான கல்விக் கட்டணம் ரூ.85 ஆயிரம். கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை. இதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தில் கிடைக்கின்றன.
சென்னை பல்கலைக்கழக உள்கட்டமைப்பு வசதிக்காக, ரூ.2 கோடியே 25 லட்சத்தை பல்கலைக்கழக மானியக் குழு வழங்கியுள்ளது.

இதைக்கொண்டு, தரமணி வளாகத்தில் மொழி ஆய்வுக் கூடம் அமைப்பது, வகுப்பறைகளை நவீனப்படுத்துவது, பல்கலை. துறைகளுக்கு 200 கம்ப்யூட்டர்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து இதுவரை தேர்ச்சி பெறாத பழைய பொறியியல், சட்ட மாணவர்கள் தோ‌ல்‌வி அடை‌ந்த பாட‌ங்க‌‌ளி‌ல் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு தாளுக்கு ரூ.15 ஆயிரம் கட்டணம் செலுத்தி இ‌ந்த தேர்வை எழுதலாம்.
மாணவர்களின் வசதிக்காக, வாரம் முழுவதும் தொலைநிலை கல்வி மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :