சென்னையில் ராகிங் தடுக்க ஆலோசனைக் கூட்டம்

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
சென்னையில் உள்ள மருத்துவம், பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ராகிங், ஈவ்-டீசிங் உள்ளிட்ட குற்றங்களை தடுப்பது குறித்து ஆலோசிக்க காவல்துறை ஆணையர் தலைமையில் நாளை கூட்டம் நடக்கிறது.

இதில் ராகிங், ஈவ்-டீசிங் உள்ளிட்டவற்றை தடுக்க சிறப்பு கண்காணிப்பு படை அமைப்பது பற்றி ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை நடைபெறும் கூட்டத்தில் சென்னை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் கலந்து கொள்கின்றனர். ராகிங்கை தடுப்பது குறித்தும், இது சம்பந்தமாக பயத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :