சிறப்பு துணைக் கலந்தாய்வு: 603 மாணவர்களுக்கு பொறியியல் ‘சீட்’

சென்னை| Webdunia| Last Modified புதன், 12 ஆகஸ்ட் 2009 (15:50 IST)
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வில் 603 மாணவர்களுக்கு பொறியியல் படிப்புக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் நேற்று நடந்த பொறியியல் கலந்தாய்வில் தொழிற் பிரிவைச் சேர்ந்த 37 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர இடம் தேர்வு செய்தனர். இதே போல் சிறப்புத் துணைக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில் 566 பேர் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தனர்.

இன்று காலியாக உள்ள அருந்ததியினர் பிரிவுக்கான இடங்களில் ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு நடக்கிறது. இன்றுடன் பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :