சமஸ்கிருதம் பேச விருப்பமா?

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:57 IST)
சென்னையில் செயல்பட்டு வரும் சுரபாரதி சமிதி என்ற அமைப்பு, சம்ஸ்கிருதம் பேசிப் பழக நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

ஒரு மாதம் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைப்பில் விருப்பமுள்ளவர்கள் சம்ஸ்கிருதத்தில் பேசலாம். இதற்கு அங்கத்தினர் சந்தா கிடையாது. மாதாந்திர நிகழ்ச்சி புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள அழகப்பா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.

மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். மேலும் விவரங்களுக்கு: பி. எஸ். ராமமூர்த்தி, 75/15, வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம், சென்னை-84 என்ற முகவரி அல்லது 044-2642 4721, 4202 7151 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :