கூட்டுறவு பட்டப்படிப்பு: செப்.30க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு

மதுரை| Webdunia| Last Modified புதன், 23 செப்டம்பர் 2009 (13:15 IST)
கூட்டுறவு மேலாண்மையில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகள் மதுரை அருகே உள்ள பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் துவங்கப்பட்டுள்ளன. இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியமும், கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் கூட்டுறவு இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதேபோல் முதுகலை பட்டப்படிப்பில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.

அரசுப் பணியாளர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர், வேலை செய்துகொண்டே சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் படிக்கலாம். இது தொலைநிலைக் கல்வியோ அல்லது அஞ்சல்வழிக் கல்வியோ அல்ல. கல்லூரிகளில் நடப்பது போன்ற பட்டப் படிப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு, பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையம், திருநகர், மதுரை-6 என்ற முகவரி அல்லது 0452-2482261 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கே.கல்யாணி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :