கூடுத‌ல் க‌ட்டண‌ம் வசூ‌லி‌க்கு‌ம் ப‌‌ள்‌ளிக‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க பு‌திய ச‌ட்ட‌ம்

சென்னை| Webdunia|
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்கவும், அவ்வாறு வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டிருக்கும் பெற்றோர், மாணவர்களின் நிலை குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விவாதத்தில் பங்கேற்று பே‌சிய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ள், தரமான கல்வி வழங்குகிறோம் என்ற போர்வையில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களை கசக்கி பிழிந்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், இதனை தடுக்க சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள் ஆகியோரை கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினா‌ர்.
இதுபோன்ற கட்டணக் கொள்ளையை தடுக்க சமச்சீர் கல்வி முறையை கொண்டு வர வேண்டும் என்று‌ம் தனியார் பள்ளிகள் மட்டுமன்றி அரசு பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூடுதல் கட்டணமும், நன்கொடையும் வசூலிக்கப்படுவதாக தெரிவித்து இதனையும் அரசாங்கம் தடுக்க வேண்டும் என்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.

இத‌ற்கு பதிலளித்து பே‌சிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனியார், அரசு பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தவுடனேயே அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.
அரசு மற்றுமஅரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து இலவச சைக்கிள், இலவச பேரு‌ந்து ‌சீ‌ட்டு, இலவச சீருடை போன்றவற்றை வழங்கி இந்த அரசு கல்வியின் தரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :