குரூப்-4, குரூப்-7 போட்டித் தேர்வு: 11இல் நடக்கிறது

சென்னை| Webdunia| Last Modified வெள்ளி, 9 அக்டோபர் 2009 (12:55 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4, குரூப்-7 போட்டித் தேர்வுகள் நாளை மறுதினம் (11ஆம் தேதி) நடக்கிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், குரூப்-4 தேர்வில் அடங்கிய தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு-3 பதவிக்கான நியமனத்துக்குரிய சிறப்புப் போட்டி தேர்வு வரும் 11ஆம் தேதி முற்பகலிலும், இந்து அறநிலையத்துறை செயல்முறை அலுவலர் கிரேடு-1 (தொகுதி 7-ஏ) பதவிக்கான நேரடி நியமன எழுத்துத் தேர்வு 11ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும் நடைபெறும்.
இந்த எழுத்துத் தேர்வுக்குரிய நுழைவுச்சீட்டுகள் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டது தொடர்பான விவரங்கள், பதிவெண் மற்றும் தேர்வுக்கூடம் போன்ற விவரங்கள் ஆகியவற்றை tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :