கிராமப்புறத்தில் அதிகளவு மாணவர்களை சேர்க்க சென்னை பல்கலை. திட்டம்

சென்னை| Webdunia| Last Modified புதன், 14 அக்டோபர் 2009 (17:40 IST)
கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அளிக்கவும், உயர் கல்வி பெறும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சென்னைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருவாசகம், இத்திட்டத்திற்காக கிராமப்புறங்களில் துவக்கப்படும் புதிய கல்வி நிறுவனங்களுக்கு, இணைப்புக் கட்டணத்தில் (சென்னைப் பல்கலையுடன்) 50% சலுகை வழங்குவதுடன், அந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக 10% மாணவர்கள் எண்ணிக்கையும் வழங்கப்படும். இதன் காரணமாக கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி பெற முடியும் என்றார்.
விரைவில் நடைபெற உள்ள பல்கலைக்கழக நிர்வாக சபைக் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படும் என்றும் திருவாசகம் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :