காவலர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

தஞ்சாவூர்| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:57 IST)
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

இதுதொடர்பாக வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் க.பெ.ராசேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் தங்கள் விருப்பக் கடிதத்தை வரும் 14ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :