காமராசர் பல்கலை. தொலை‌நிலை படி‌ப்‌பி‌ல் சேர நாளை கடைசி நா‌ள்

Webdunia|
மதுரை காமரசர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வியில் 2008-09ஆ‌ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர டிச‌ம்ப‌ர் 31ஆ‌ம் தேதி கடைசி நா‌ள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வெரைட்டி ஹால் சாலை, சி.எஸ்.ஐ. பிரைமரி பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவரும் பல்கலைக்கழக சேர்க்கை மையத்தில் நேரடி சேர்க்கை நடக்கிறது.

மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து டிச‌ம்ப‌ர் 31ஆ‌ம் தேதி மாலைக்குள் நேரில் சமர்ப்பித்து அனுமதி ஆணை மற்றும் பாடபுத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலு‌ம், விவரங்களுக்கு 0422 - 2304910 என்ற எண்ணில் சேர்க்கை மைய அதிகாரிகளை மாணவர்கள் தொடர்பு கொ‌ண்டு கே‌ட்ட‌றியலா‌ம் எ‌ன்றஅ‌ப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்குனர் சபா வடிவேலு தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :