காஞ்சிபுரத்தில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:57 IST)
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை (12ஆம் தேதி) காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மகளிர் பள்ளியில் நடைபெறுகிறது.

இம்முகாமில், பாக்ஸ்கான் நிறுவனம் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதில் 18 முதல் 25 வரை உள்ள, 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் (தேர்ச்சி பெறாதவர்களும்) பங்கேற்கலாம் என வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் கோ.ஜெயபால் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :