கல்வி முகவர்கள் கடும் தண்டனைக்குள்ளாவர்: கிருஷ்ணா

Webdunia| Last Modified சனி, 8 ஆகஸ்ட் 2009 (19:42 IST)
அயல் நாட்டில் கல்வி கற்கும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கூறி மாணவர்களை ஏமாற்றும் கல்வி முகவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா எச்சரித்துள்ளார்.

ஐந்து நாள் பயணமாக ஆஸ்ட்ரேலியா வந்துள்ள அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, மெல்பர்னில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, அயல்நாட்டுக் கல்வி குறித்து மாணவர்களை தவறாக வழி நடத்தும் கல்வி முகவர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், “அவர்களை இரக்கமின்றி தண்டிப்போம்” என்று கூறினார். இப்படிப்பட்ட கல்வித் தரகர்களை கண்டிப்பிடித்து தண்டிப்பதில் இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :