கலை‌க் கல்லூரிகள் நாளை திறப்பு

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:39 IST)
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் த‌னியா‌ர் கலைக் கல்லூரிகளில் முதுகலை வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்குகின்றன. இளங்கலை வகுப்புகள் பிப்ரவரி 16 (திங்கள்கிழமை) தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

த‌மி‌ழ் ஈழ ம‌க்க‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் நட‌த்‌தி வரு‌ம் தா‌க்குதலை ‌நிறு‌த்த‌க் கோ‌ரி க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம் உ‌ள்‌ளி‌ட்ட போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

இதனை‌த் தொட‌ர்‌ந்து அனை‌த்து‌க் க‌ல்லூ‌ரிக‌ள் ம‌ற்று‌ம் ‌விடு‌திகளையு‌ம் காலவரை‌யி‌ன்‌றி மூட த‌மிழக அரசு உ‌த்த‌வி‌ட்டது.
இந்நிலையில், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் விடுதிகள் வியாழக்கிழமை திறக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி ெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர்களே முடிவெடுக்கலாம்... முதுகலை வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், சூழ்நிலைக்கு ஏற்ப கல்லூரிகளைத் திறக்கும் முடிவை அந்தந்த கல்லூரி முதல்வர்களே எடுக்கலாம் என்று தலைமைச் செயலாளரின் செய்திக் குறிப்பில் கூற‌ப்பட்டுள்ளது.

இதன் மூலம், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும் போது, அரசைக் கேட்டுக் கொண்டு கல்லூரிகளை மூட வேண்டிய நிலை கல்லூரி முதல்வர்களுக்கு இனி இருக்காது
ஆனால், சட்டக் கல்லூரி எப்போது திறக்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை.


இதில் மேலும் படிக்கவும் :