கணினி மூலம் சிஏடி தேர்வு துவங்கியது

Webdunia| Last Modified சனி, 28 நவம்பர் 2009 (13:28 IST)
இந்திய மேலாண்மைக் கல்விக் கழகங்களில் (Indian Institute of Management - IIM) சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு முதல் முறையாக கணினியின் வாயிலாக இன்று முதல் துவங்கியது.

இந்தியா முழுவதிலும் 32 நகரங்களிலுள்ள 105 மையங்களில் கணினி வாயிலாக முதல் முறையாக பொது நுழைவுத் தேர்வு (Common Admission Test - CAT) இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இதனை நடத்தும் பொறுப்பு பிரோமெட்ரிக் எனும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் 10 கட்டங்களாக நடத்தப்படும் இத்தேர்வில் 2.4 இலட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு நாளும் இரண்டு சுற்றுத் தேர்வுகள் நடைபெறும். முதல் சுற்றுத் தேர்வு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், இரண்டாவது சுற்று மதியம் 3.30 முதல் மாலை 6.00 மணி வரையிலும் நடைபெறும்.
தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :