கணிதத்தில் வல்லவரா நீங்கள்?

சென்னை| Webdunia| Last Modified திங்கள், 13 ஜூலை 2009 (11:46 IST)
பள்ளியில் படிக்கும் மாணவராக இருந்தாலும், கல்லூரி மாணவராக இருந்தாலும் அவர்களுக்கு பிற பாடங்களை விட கணிதம் எப்போதுமே சவால் அளிக்கும் பாடமாகவே இருக்கிறது. பல மாணவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்குகின்றனர்.

கணிதத்தில் நானும் ஒரு புலிதான் என்று நீங்கள் நினைத்தால் உங்களின் திறனைப் பரிசோதிக்க ஆஸ்பயர் லேர்னிங் கம்பெனி (Aspire Learning Company) சார்பில் நடக்கும் கணிதப் போட்டியில் (Aspire Maths Expo-2009) பங்கேற்கலாம்.

தென்னிந்திய அளவில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படும் இந்தக் கணிதப் போட்டி சென்னையில் ஜூலை 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பத, இதர விவரங்களைப் பெற 28345969 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :