ஐந்தாண்டு B.L. படிப்பு: நாளை 2ஆம் கட்ட கலந்தாய்வு

சென்னை| Webdunia| Last Modified வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (12:16 IST)
ஐந்தாண்டு சட்டப் படிப்புகளில் சேருவதற்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை நடைபெறும் 2ஆம் கட்ட கலந்தாய்வில் பொதுப்பிரிவில் கட் ஆப் மதிப்பெண் 73.875 பெற்றவர்களும், எஸ்.சி(அருந்ததியினர்)-55, எஸ்.சி-68.500, பி.சி-49.375, எம்.பி.சி/டி.என்.சி-49 பெற்ற மாணவர்களும் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியுள்ள மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. எனினும், அழைப்புக் கடிதம் கிடைக்காத தகுதியுள்ள மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களை அறிய 24641212 அல்லது 24641919 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :