ஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத்தேர்வு நாளை நட‌க்‌கிறது

Webdunia| Last Modified சனி, 24 ஏப்ரல் 2010 (12:22 IST)
மத்திய அரசு கல்லூரிகளில் சேர நடத்தப்படும் அகில இந்திய பொ‌‌றி‌யிய‌லநுழைவுத்தேர்வு (A.I.E.E.E) நாடு முழுவதும் நாளை நடைபெறு‌கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பொ‌றி‌யிய‌லகல்லூரிகள், உதவி பெறும் பொ‌றி‌யிய‌லகல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் பிளஸ்2 கணிதம், இயற்பியல், வேதியியல் மதிப்பெண்கள் அடிப்படையில் கல‌ந்தா‌ய்வமூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நுழைவுத்தேர்வு எதுவும் நடத்தப்படுவது இல்லை.
ஆனால், மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் (என்.ஐ.டி.), இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்லூரிகள் (ஐ.ஐ.ஐ.டி.) போன்ற நிறுவனங்களில் பி.இ., பி.டெக். பி.ஆர்க். பி.பிளான் படிப்புகளுக்கான இடங்கள் அகில இந்திய பொ‌றி‌யிய‌லநுழைவுத்தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.) மூலம் நிரப்பப்படுகின்றன. மேலும், குறிப்பிட்ட சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இந்த நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை சேர்க்கின்றன. இந்த தேர்வை மத்திய செகண்டரி கல்வி வாரியம் நடத்துகிறது.
தமிழ்நாட்டில் திருச்சி என்.ஐ.டி., காஞ்‌சிபுரம் ஐ.ஐ., இ.டி. டிசைன் மற்றும் மேனுபேக்சரிங் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் உள்ள பொ‌றி‌யிய‌லஇ‌ட‌ங்க‌ளஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

2010-2011ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 86 நகரங்களில் நாளை நடைபெறு‌கிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்க‌‌ள்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் தேர்வு நடக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 2ஆம் தாள் தேர்வும் நடக்கிறது.

நுழைவுத்தேர்வின் முடிவு மே மாதம் கடைசியில் அல்லது ஜுன் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து கல‌ந்தா‌ய்வநடத்தப்பட்டு வெவ்வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுவார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :