ஏலத்தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

சென்னை:| Webdunia| Last Modified வியாழன், 4 ஜூன் 2009 (11:53 IST)
ஏலத் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய பத்திரிகை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கொச்சியிலுள்ள வாசனைப் பொருட்கள் வாரியம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. பத்தாம் வகுப்புக்கு மேலே படிப்பதற்கு ஊக்குவிப்பதற்காக இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை கொச்சியிலுள்ள வாரியத்தின் தலைமை அலுவலகத்திலும், பிற மாநிலங்களிலுள்ள பிராந்திய மற்றும் கள அலுவலகங்களிலும் இலவசமாகப் பெறலாம்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை 02-09-2009 அன்றோ, அதற்கு முன்போ அருகிலுள்ள வாசனைப் பொருள் வாரிய அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :