ஏஏடி அளிக்கும் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை

சென்னை| Perumal| Last Modified வியாழன், 9 ஏப்ரல் 2009 (19:15 IST)
அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் பல்கலைக்கழகத்துடன் இணைந்த அக்சஸ் அட்லான்டெக் எஜூடெயின்மென்ட் (இ) லிமிடெட் (ஏஏடி), பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரத்துடன் கூடிய பட்டப்படிப்புகளை அளிக்க உள்ளது.

2009-2010ஆம் ஆண்டிற்கானமாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும், பட்டப்படிப்பு வகுப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

6 செமஸ்டர்களைக் கொண்ட பி.ஏ. ஊடகப் படிப்பு (Media Studies) 36 மாத கால படிப்பில் சென்னை, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள ஏஏடி வளாகங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு விவரம்:

பி.ஏ. டிஜிட்டல் திரைப்பட தயாரிப்பு மற்றும் ஒலிப்பதிவுக் கலைகள் (Digital Film Making and Recording Arts).

ஆஸ்திரேலியாவின் எஸ்ஏஇ - பைரான் பே வழங்கும் 2 பட்டயச் சான்றிதழ்களும், திப்ருகார் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டமும் இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த பட்டப்படிப்பு சென்னை மற்றும் மும்பையில் பயிற்றுவிக்கப்படுகிறது.

பி.ஏ. அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் திரைப்பட தயாரிப்பு
(Animation and Digital Film Making):

ஆஸ்திரேலியாவின் 2 பட்டயச் சான்றிதழ்களுடன் இளநிலை பட்டமும் வழங்கப்படும். ஏஏடி அனைத்து இடங்களிலும் இந்தப் படிப்பு உள்ளது.
சிறப்புப் படிப்புகள்:

பி.ஏ. கேம்ஸ் மற்றும் கேம்ஸ் டிசைனிங் அனிமேஷன்,
பி.ஏ. கேம்ஸ் டிசைன், புரோகிராமிங் மற்றும் டெவலப்மென்ட் ஆகிய படிப்புகளையும் ஏஏடி அளிக்கிறது.

இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக ஏஏடி-யின் தலைமை நிர்வாக அதிகாரி ரந்திஷ் பாபு தெரிவித்தார்.
இந்தப் படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.

இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்படிவங்களும், விவரக்குறிப்புகளும் நாடு முழுவதும் உள்ள ஏஏடி மையங்களில் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை வழங்கப்படும். மாணவர் சேர்க்கை ஜூலை 25ஆம் தேதி நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :