எ‌ஸ்எ‌ஸ்எ‌ல்‌சி தே‌ர்வு 25‌ல் துவ‌ங்கு‌கிறது

Webdunia|
ப‌த்தா‌ம் வகு‌ப்பு பொது‌‌த் தே‌ர்வு வரு‌ம் 25-ந் தேதி தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் 50 ஆயிரம் பேர் உள்பட மொத்தம் 9 லட்சம் மாணவ-மாணவிகள் பொது‌த் தேர்வு எழுதுகிறார்கள்.

இது கு‌றி‌த்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 25-ந் தேதி தொடங்கி ஏ‌ப்ர‌ல் மாத‌ம் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6,541 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

இந்த ஆண்டு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழி வினாக்கள் ஒரே வினாத்தாளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளன. முதலில் தமிழ்வழியிலும் அதைத்தொடர்ந்து, ஆங்கில வழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்
இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகளை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதுவரை எஸ்.எஸ்.எல்.சி., கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் வினாத்தாள்கள் ஆங்கில வழிக்கும், தமிழ் வழிக்கும் தனியே அச்சிடப்பட்டு வழங்கப்படும். இந்த ஆண்டு முதல்முறையாக ஒரே வினாத்தாளில் இரு மொழிகளின் வினாத்தாளும் ஒன்றன்பின் ஒன்றாக அச்சிட்டு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :