எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுது‌ம் கை‌திக‌ள்

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (23:20 IST)
வரு‌ம் 25-ந் தேதி தொடங்கு‌ம் எ‌ஸ்எ‌ஸ்எ‌ல்‌சி பொது‌த் தே‌ர்‌வி‌ல், த‌மிழக‌ம் முழுவது‌ம் இரு‌ந்து 137 கை‌திகளு‌ம் எழுத உ‌ள்ளன‌ர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இ‌ந்த‌ப் பொ‌து‌த் தேர்வு எழுதுகிறார்கள்.

சென்னை புழல், வேலூர், கோவை, சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய மத்திய ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள 137 கைதிகள் எஸ்.எஸ்.எல்.சி. தே‌ர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண் கைதிகளும் உள்ளனர்.
சென்னை புழல் ‌சிற‌ை‌ச்சாலை‌யி‌ல் மட்டும் 17 கைதிகள் தேர்வு எழுதுகிறார்கள். ‌சிறை‌ச்சாலை‌க்கு அருகில் உள்ள தேர்வு மையங்களில் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காவ‌ல்துறை பாதுகாப்புடன் தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தேர்வு முடிந்ததும் அதேபோல் பாதுகாப்போடு ‌சிறை‌க்கு அழைத்து வரப்படுவார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :