எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. மாணவ‌ர்களு‌க்கு ‌மீ‌ண்டு‌ம் வா‌ய்‌ப்பு

செ‌ன்னை | Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:46 IST)
எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத இதுவரை விண்ணப்பிக்காத வர்கள் `உடன் அனுமதி' திட்டத்தின் கீழ் வரு‌ம் 24ஆ‌மதேதி முதல் விண்ணப்பிக்கலாம் எ‌ன்றஅரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுதொடர்பாக அவ‌ரவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெற உள்ளன. துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது `உடன் அனுமதி' திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்கள் 24ஆ‌‌மதேதி முதல் 26ஆ‌மதேதி வரை வழங்கப்படும். அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

உடன் அனுமதி திட்டத்தின்கீழ் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை "அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6'' என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகத்தில் 26ஆ‌மதேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது உடனடியாக ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் விண்ணப்பத்தை தபால் மற்றும் கூரியர் மூலம் அனுப்பக் கூடாது எ‌ன்றவசுந்தராதேவி கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :