எம்.பி.ஏ., எ‌ம்.‌சி.ஏ. நுழைவுத் தேர்வை 95,000 பேர் எழு‌‌‌து‌கி‌ன்றன‌ர்

செ‌ன்னை | Webdunia| Last Modified சனி, 30 மே 2009 (11:55 IST)
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வை 95 ஆயிரம் பேர் இ‌ன்றஎழு‌‌து‌கி‌ன்றன‌ர்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுநிலை பட்டப் படிப்புகளை நடத்துகிறது.

இந்த படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் 24ஆம் தேதி சமர்ப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த படிப்புகளில் சேர்வதற்காக 95 ஆயிரத்து 380 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு இன்று நுழைவுத் தேர்வு நட‌ந்தது.
சென்னை, கோவை, சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு‌ள்ளன.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், குரோம்பேட்டை எம்.ஐ.டி உள்பட 26 மையங்கள் அமைக்கப்பட்டிரு‌ந்தன. எம்.பி.ஏ தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிவரை நட‌ந்தது.
எம்.சி.ஏ தேர்வு மதியம் 2.30க்கு தொடங்கி மாலை 4.30க்கு முடிகிறது. எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :