எம்.பி.ஏ, எம்.சி.ஏ விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்

செ‌ன்னை | Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:46 IST)
அரசு பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ. படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் தரப்படுகிறது.

தொழில்நுட்ப கல்வித்துறை, கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில், இந்த ஆண்டு எம்.பி.ஏ, எம்.சி.ஏ. பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள், இன்று (11ம் தேதி) முதல் 30ஆம் தேதி வரை வினியோகிக்கப்படுகிறது.
பொதுப்பிரிவினருக்கு ரூ.300, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.150 என விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'செயலர், எம்.பி.ஏ, எம்.சி.ஏ சேர்க்கை-2009, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை-641 013' என்ற பெயரில் டிடி அனுப்பி, விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :