இ‌ன்று துவ‌ங்‌கியது +2 பொது‌த் தே‌ர்வு

Webdunia|
தமிழகம் மற்றும் புது‌ச்சே‌ரி‌யி‌ல் ப‌னிரெ‌ண்டா‌ம் வகு‌ப்பு பொதுத்தேர்வுக‌ள் இ‌ன்று துவ‌ங்‌கின.

தே‌ர்வுக‌ளி‌ல் மாணவ‌ர்க‌ள் எ‌ந்த முறைகேடுக‌ளிலு‌ம் ஈடுபடாம‌ல் தடு‌க்கு‌ம் வ‌ண்ண‌ம், தேர்வு மையங்களைப் பார்வையிட்டு திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள கல்வித்துறை உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவையில் உ‌ள்ள 1,738 தேர்வு மையங்களில் சுமார் 6.90 லட்சம் மாணவ-மாணவிகள் இ‌ன்று பொது‌த் தே‌ர்வை எழுதுகின்றனர்.
இ‌ன்று (‌‌தி‌ங்க‌ள்‌ கிழமை) மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி, பகல் 1.15 மணிக்கு முடிவடைகின்றன.

வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங்கள், அறைகளுக்கு பலத்த காவ‌ல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க, 4 ஆயி ரம் அதிகாரிகள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வுத்துறை, பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் 14 பேர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்
முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாள்களில் தேர்வு மையங்களைப் பார்வையிட, அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் சிறப்புப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :