இன்றுடன் முடிகிறது MBBS முதற்கட்ட கலந்தாய்வு

சென்னை| Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:42 IST)
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக சென்னையில் நடந்து வரும் முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை உட்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள், 4 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 283 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூலை 6ஆம் தேதி துவங்கிய முதல் முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது.
பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்குவதற்குள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் மாநில ஒதுக்கீடான 85 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :