இந்தியா-மலேசியா இடையே உயர்கல்வி ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

கோலாலம்பூர்| Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:18 IST)
இந்தியா-மலேசியா இடையே உயர்கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

காமன்வெல்த் கல்வி அமைச்சர்களின் 17வது மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று துவங்கியது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், மலேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் முகமத் கலீத்தை சந்துத்துப் பேசினார்.

அப்போது மலேசிய-இந்தியா இடையே உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அத்துடன் இரு நாடுகளிலும் உள்ள பல்கலைக் கழகங்களின் பட்டங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடர்பான பிரச்சனைகளை ஆராய்வதற்காக பணிக் குழு ஒன்றை அமைப்பது எனறும் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான முறையான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான முயற்சிகளை இரு நாடுகளும் முடுக்கிவிட வேண்டும் என்றும் இருவரும் முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :