இந்தியாவில் கால்பதிக்க இங்கிலாந்து கல்வி நிறுவனம் திட்டம்

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
இங்கிலாந்தின் ஆரம்பக் கல்வி, துவக்கக் கல்வியில் சிறந்து விளங்கும் எட்எக்ஸல் (Edexcel) நிறுவனம் இந்திய பள்ளிகளுடன் கூட்டு அமைக்க திட்டமிட்டு வருகிறது.

சென்னை செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த எட்எக்ஸல் நிறுவனத்தின் தெற்காசிய மண்டல இயக்குனர், இங்கிலாந்தில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையிலான பல்வேறு படிப்புகளை வழங்க இந்தியாவில் உள்ள 50 பள்ளிகளுடன் இந்தாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.
எட்எக்ஸல் நிறுவனத்தின் BTEC (Business And Technology Education Council) சான்றிதழ் படிப்புக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் 85 நாடுகளில் இயங்கி வரும் எட்எக்ஸல் நிறுவனத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளை 40 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்திற்கு பீஜிங், ஹாங்காங், கோலாலம்பூர், துபாய், கொழும்பு, கேப்டவுன் ஆகிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :