இடஒதுக்கீட்டை நிறைவேற்றத் தவறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: கபில் சிபல்

புதுடெல்லி| Webdunia| Last Modified புதன், 22 ஜூலை 2009 (10:05 IST)
டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவின் படி அனைத்து பள்ளிகளிலும் ஏழைக் குழந்தைகளுக்கு 15% இடஒதுக்கீட்டை நிறைவேற்றத் தவறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி மசோதா மாநிலங்களவையில் கடந்த 20ஆம் தேதி (நேற்று முன்தினம்) நிறைவேறியது. இதுகுறித்து நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் பேசுகையில், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து பள்ளிகளும் ஏழை குழந்தைகளுக்கு 15% இடஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை ஒதுக்க வேண்டும். அவ்வாறு இடஒதுக்கீடு அளிக்கத் தவறும் பள்ளிகளின் ஒப்பந்தம் ரத்து ஆகும்.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கும், தற்போது மாநிலங்களவையில் நிறைவேறறப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீடு செய்யும் அனைவருக்கும் இலவச கல்வி மசோதாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

இந்த மசோதாவின் ஒதுக்கீட்டு முறையை மீறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்யும் என்று கபில் சிபல் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :