இங்கிலாந்து பல்கலையுடன் சாஸ்த்ரா புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர்| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:57 IST)
இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர் பல்கலையுடன் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி உயிரி அறிவியல் மற்றும் இதர பொறியியல் பிரிவுகளில் கூட்டு ஆய்வு மேற்கொள்ளவும், மாணவர்கள், ஆசிரியர் பரிமாற்றத்திற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

இதுமட்டுமின்றி சாஸ்த்ரா பல்கலையில் பி.டெக் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக்கழகத்திற்கு சென்று ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :