இக்னோவில் 'சமுதாய வானொலி' சான்றிதழ் படிப்பு!

Webdunia| Last Modified புதன், 1 அக்டோபர் 2008 (12:20 IST)
சமுதாய வானொலி குறித்த ஆறு மாத சான்றிதழ்ப் படிப்பை, இக்னோ வரும் ஜனவரியில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழ (இக்னோ) துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை புதுடெல்லியில் கூறுகையில், ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மையத்துடன் கூட்டாக சமுதாய வானொலி சான்றிதழ் படிப்பை இக்னோ நடத்தும் என்றார்.

வரும் ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ள இந்த சான்றிதழ் படிப்புக்கு 150 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், சமுதாயப் பொருளாதாரம் தொடர்பான பாடம் பயின்றவர்கள் இதில் சேரத் தகுதியுடையவர்கள் என்று துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை மேலும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :