ஆண்டுதோறும் 54 விளையாட்டு வீரர்களுக்கு இலவச கல்வி: வேல்ஸ் பல்கலை. அறிவிப்பு

சென்னை| Webdunia| Last Modified திங்கள், 20 ஜூலை 2009 (12:30 IST)
சென்னையில் செயல்பட்டு வரும் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் 54 விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக கல்வி வழங்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவருமான ஐசரி கணேஷ் செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் 54 விளையாட்டு வீரர்களுக்கு இலவச கல்வி அளிக்க முடிவு செய்துள்ளோம்.

தற்போது தமிழக ஒலிம்பிக் சங்கத்தில் 27 விளையாட்டு சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன. ஒவ்வொரு சங்கத்தில் இருந்துமதகுதி, திறமை படைத்த 2 வீரர்களை அந்தந்த சங்கங்கள் தேர்வு செய்து, தமிழக ஒலிம்பிக் சங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் 54 விளையாட்டு வீரர்களுக்கும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள எந்த பாடப் பிரிவுகளிலும் இலவசமாக சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழக ஒலிம்பிக் சங்கத்தால் பரிந்துரைக்கப்படும் வீரர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படும் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :