ஆட்சேர்ப்பு பணியை துரிதப்படுத்துகிறது மத்திய பணியாளர் தேர்வாணையம்

மும்பை| Webdunia| Last Modified செவ்வாய், 3 நவம்பர் 2009 (17:13 IST)
பொதுத்துறை நிறுவனங்களில் மனிதவளத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆட்சேர்ப்பு பணியை மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) துரிதப்படுத்த உள்ளதாக அதன் தலைவர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, “தற்போது மத்திய அரசில் நடுநிலை அளவில் 17 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு பணியின் காலம் கூடுதலாக இருப்பதால் இந்த காலியிடங்களை நிரப்ப குறைந்தது ஒன்றரை முதல் 2 ஆண்டுகள் பிடிக்கும்.

ஆட்சேர்ப்பு பணியை துரிதப்படுத்துவதன் மூலம் ஏராளமான இளைஞர்களை அரசுப் பணியில் சேர்க்க முடியும் அதனை மேற்கொள்ள மத்திய பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளத” எனக் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :