ஆகஸ்ட் 25இல் மருத்துவப் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு

சென்னை| Webdunia| Last Modified வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (17:50 IST)
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்பில் உள்ள காலியிடங்களை நிரப்ப சென்னை கீழ்ப்பாக்கத்தில் வரும் 25ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை ஏற்கெனவே படிப்பில் சேர்ந்து வேறு கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் மற்றும் உச்சநீதிமன்ற 50% இடஒதுக்கீடு அடிப்படையில் ரேங்க் பட்டியலில் (ரேங்க் 441-ஏ முதல் ரேங்க் 742 வரை) இடம்பெற்ற முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோருக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வில் இடம் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளத
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 9 காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 800க்கும் அதிகமான அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கும் 2ஆம் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :