அ‌ண்ணா ப‌ல்கலை. மு‌ன்னா‌‌ள் துணைவே‌ந்த‌ர் டி. ‌வி‌ஸ்வநாதனு‌க்கு ‌பிரா‌ன்‌ஸ் நா‌ட்டு ‌விருது

webdunia photoFILE
கட‌ந்த 2005 ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் 2008 வரை செ‌ன்னை அ‌ண்ணா ப‌ல்கலை‌க் கழக‌ துணை வே‌ந்தராக ப‌ணியா‌‌ற்‌றியவ‌ர் பேரா‌சி‌‌ரிய‌ர் டி. ‌வி‌ஸ்வநாத‌ன்.

இவ‌ர் தனது ப‌ணி‌க்கால‌த்‌தி‌ல் ப‌ல்கலை‌க் கழக‌ வள‌ர்‌‌ச்‌சி‌க்காக பல ‌தி‌ட்ட‌ங்களை செ‌ய‌ல்படு‌த்‌தினா‌ர். அ‌ண்ணா ப‌ல்கலை‌க் கழக‌த்‌தி‌ற்கு‌ம் ‌பிரா‌ன்‌ஸ் நா‌ட்டு ப‌ல்கலை‌க் கழகங்களு‌க்கும் இடையே ப‌‌ல்வேறு ஒ‌ப்ப‌ந்த‌ங்களை ஏ‌ற்படு‌த்‌தினா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து டி.‌வி‌ஸ்வநாதன‌ை‌ப் பாரா‌ட்டி அவரு‌க்கு ‌பிரா‌ன்‌ஸ் நா‌ட்டி‌‌ன் க‌ல்‌‌வி‌க்கான உய‌ரிய ‌விருதான "அகாட‌மி‌க் பா‌ம்‌‌ஸ்" ‌விருது வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Webdunia|
செ‌ன்னை அ‌ண்ணா ப‌ல்கலை‌க் கழக‌ மு‌ன்னா‌ள் துணைவே‌ந்த‌ர் டி.‌வி‌ஸ்வநாதனு‌க்கு க‌ல்‌வி‌ப் ப‌ணி‌க்கான ‌பிரா‌ன்‌ஸ் நா‌ட்டி‌ன் உய‌ரிய ‌விருதான "அகாட‌மி‌க் பா‌ம்‌ஸ்" ‌விருது வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
க‌ல்‌வி‌ச் சேவை‌யி‌ல் ‌சிற‌‌‌ப்பாக ப‌‌ணியா‌ற்றுபவ‌ர்களு‌க்கு கட‌ந்த 200 ஆ‌ண்டுகளாக ‌பிரா‌ன்‌ஸ் அரசு ‌விருது வழ‌ங்‌கி கவுர‌‌வி‌த்து வரு‌கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கது.


இதில் மேலும் படிக்கவும் :