அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் காலியிடம்: விரைவில் 1000 பேர் நியமனம்

சென்னை| Webdunia| Last Modified வியாழன், 23 ஜூலை 2009 (13:24 IST)
அரசு பள்ளிகளில் கடந்த 2007-08ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலியிடங்களில் விரைவில் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2007-08 மற்றும் 2008-09ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காலியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 மாதத்துக்கு முன்பு சான்‌றித‌ழ் சரிபார்ப்பு பணியில் பங்கேற்றவர்களில்1,156 பேர் பணியில் சேர்ந்தனர். மீதமுள்ள 250 பேர் பணியில் சேரவில்லை.

இந்த இடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இன்றும், நாளையும் சான்‌றி‌த‌ழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. இதற்காக 936 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர கடந்த 2007-08ஆம் ஆண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களுக்கு ஏற்பட்ட ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களும் விரைவில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :