அரசு ஐடிஐ காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூர்| Webdunia| Last Modified வெள்ளி, 25 செப்டம்பர் 2009 (13:21 IST)
வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 30ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிற்பட்டோருக்கான கடைசல்பிடிப்பவர் இடம் 1, பொதுப்பிரிவினருக்கான இயந்திர வேலையாள் 1, தோல்பொருட்கள் மற்றும் காலணி பிரிவில் பொதுப் பிரிவினருக்கு 8, பிற்பட்ட பிரிவினருக்கு 17, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 என மொத்தம் 30 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் சேர விரும்புவோர் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிற்பட்டோருக்கான தச்சர்-1, உலோகத்தகடு வேலையாள்-2, பொதுப்பிரிவினருக்கு-1 ஆகிய 4 காலியிடங்களில் சேர விரும்புவோர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உரிய சான்றிதழ்களுடன், வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை வரும் 30-ம் தேதிக்குள் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :