அண்ணா பல்கலை மாணவர்களுக்கு இணையதள கல்வித் திட்டம்

சென்னை| Webdunia| Last Modified செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (18:07 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய இணையதள கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை Edserv Soft Systems என்ற நிறுவனம் நடைமுறைப்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 2009-10 கல்வி ஆண்டுக்கான 220 பாடப்பிரிவுகளுக்கு மின்னணு பாடங்கள் இந்த இணையதளத்தில் அடங்கியிருக்கும். லாம்ப்ஸ் என்ற இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 4 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :