அடுத்த வாரம் ‌பி.எ‌ட் விண்ணப்பம் ‌‌வி‌னியோக‌ம்

சென்னை| Webdunia| Last Modified சனி, 8 ஆகஸ்ட் 2009 (12:35 IST)
இ‌ந்த ஆ‌ண்டு ‌‌பி.எ‌ட். மாணவ‌ர் சே‌ர்‌க்கை‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ம் அடு‌த்த வார‌ம் ‌‌‌வி‌னியோ‌கி‌க்க‌ப்படு‌கிறது. இத‌ற்கான கல‌ந்தா‌ய்வு செ‌ன்னை‌யி‌ல் நடைபெற உ‌ள்ளது.

தமிழகத்தில் உ‌ள்ள 7 அரசு பி.எட் கல்லூரிக‌ளி‌ல் தலா 100 இடங்கள் உள்ளன. மேலு‌ம் சிறப்பு கல்லூரிகள் 2 உள்ளன. இவற்றில் தலா 100 இடங்கள் உள்ளன.

இது தவிர 628 சுயநிதி பி.எட் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள இடங்களில் 65 சதவீத இடங்கள், சிறுபான்மை பி.எட் கல்லூரிகளில் உள்ள 50 சதவீத இடங்கள் ஒற்றை சாளர முறையின் கீழ் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது அடுத்த வாரம் இதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படு‌கிறது. சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் பிஎட் கல்லூரியில் கல‌ந்தா‌ய்வு நட‌க்‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :