இந்த வார சிறப்புகள்

Webdunia|
இந்த வார நாட்களில் வரும் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.
ஆகஸ்ட் 1 சனி : சமநோக்கு நாள், சர்வ ஏகாதசி, கும்பகோணம் சாரங்கபாணி ஜேஷ்டாபிஷேகம். லோகமான்ய திலகர் தினம்.

ஆகஸ்ட் 2 ஞாயிறு : சென்னை - பழவந்தாங்கல் வேம்புலி அம்மன் கோயில் 16ஆம் ஆண்டு தீமிதி விழா. ஆடி 3ம் வார ஞாயிற்றுக்கிழமை.

ஆகஸ்ட் 3 திங்கள் : பிரதோஷம், சகல நதித்தீர்த்தங்களிலும் ஆடிப்பெருக்கு விழா. கீழ்நோக்கு நாள். வடமதுரை செளந்தராஜப் பெருமாள் திருக்கல்யாணம்.
ஆகஸ்ட் 4 செவ்வாய் : கீழ்நோக்கு நாள், சமயபுரம் மாரியம்மன் சிறப்பு வழிபாடு, திருமலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய்த்தாழி சேவை. இரவு குதிரை வாகனத்தில் திருவீதி புறப்பாடு.

ஆகஸ்ட் 5 புதன் : ஆவணி அவிட்டம். மேல்நோக்கு நாள். பெளர்ணமி. திருவோண விரதம். கரிநாள். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா.
ஆகஸ்ட் 6 வியாழன் : மேல்நோக்கு நாள். காயத்ரி ஜபம். சங்கரன் கோயில் கோமதியம்மன் ஊஞ்சலில் காட்சியருளல். கர்த்தர் ரூபம் மாறிய தினம். பெரிய நகசு.

ஆகஸ்ட் 7 வெள்ளி : மேல்நோக்கு நாள். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் ரதோத்ஸவம்.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :