தேவயானி கோப்ரகடே ஒரு அசல் குற்றவாளி

FILE


தேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடே மகாராஷ்டிரா மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மும்பையில் பிறந்து வளர்ந்த தேவயானி மவுண்ட் கார்மல் பள்ளியில் படித்து சேத் ஜி எஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார். மருத்துவராக பணி புரிவதை விடுத்து, அவரது உறவினரான 1985 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி அஜய் எம் கோண்டானேவின் ஆதரவில் 1999 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.

பாகிஸ்தான், இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இந்திய தூதரகங்களின் அரசியல் பிரிவில் பணியாற்றிய பிறகு, பெரிதும் விரும்பப்படும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி நியமனம் பெற்றார்.

2012 ஆம் ஆண்டு நியூயார்க்கில் இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தூதராக நியமிக்கப்பட்டதும், அங்கு தனக்கு வீட்டு வேலை செய்வதற்காக ஆள் தேட ஆரம்பித்திருக்கிறார் தேவயானி.

சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண் மும்பையில் உள்ள தேவயானியின் வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார். அமெரிக்காவில் தனது வீட்டில் தங்கி குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் ஆள் தேடிக் கொண்டிருப்பதாகவும் ரூ.25,000 சம்பளமும், ரூ.5,000 ஓவர் டைம் ஊதியமாகவும் தருவதாக சொல்லியிருக்கிறார். சங்கீதாவின் வீட்டு வேலை செய்யும் திறனை மதிப்பிடும் விதமாக தேவயானி தனது வீட்டில் அவரை பல நாட்கள் வேலை வாங்கியிருக்கிறார்.

Webdunia|
நாட்டை அமெரிக்காவின் சுரண்டலுக்கு திறந்துவிட்டிருக்கும் இந்திய அரசும், அதிகார வர்க்கமும், தேவயானி விவகாரத்தில் அமெரிக்க எதிர்ப்பு போர் நடத்துவது போல குமுறி கொந்தளிப்பது ஒரு மோசடித்தனம்.
தூதரக பாஸ்போர்ட் பெறப் போவதாக சொல்லி சங்கீதாவின் சாதாரண இந்திய பாஸ்போர்ட்டை தேவயானி வாங்கிக் கொண்டிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :