திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (13:00 IST)

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

Brain death

தேனியில் விளையாட்டு பயிற்சியின்போது ஈட்டி பாய்ந்ததில் சிறுவன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தவர் 13 வயது சிறுவன் சாய் பிரகாஷ். அங்குள்ள பள்ளி மைதானத்தில் சிறுவன் சாய் பிரகாஷ் கால்பந்து போட்டிக்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

 

அப்போது அதே மைதானத்தில் திபேஸ் என்ற 19 வயது இளைஞரும் ஈட்டி எறிதல் பயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். எதிர்பாராத விதமாக திபேஸ் வீசிய ஈட்டி சாய் பிரகாஷை தாக்கியதில் அவர் நிலைக்குலைந்து விழுந்தார்.

 

உடனடியாக சிறுவன் சாய் பிரகாஷ் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாய் பிரகாஷ் மூளைச்சாவு அடைந்துள்ளார். இது அவரது பெற்றோர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K